search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி மார்க்கெட்"

    • வியாபாரிகளிடம் ஆ.ராசா எம்.பி. உறுதி அளித்தார்.
    • வியாபாரிகள் ஆ.ராசாவுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்

    ஊட்டி,

    நீலகிரி ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஊட்டி நகராட்சி தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்கெட் வியாபாரிகள் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கருணை மனு அனுப்பினர்.

    இதனையடுத்து நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை சந்தித்தனர். நீலகிரி எம்.பி. ஆ.ராசாவிடம், ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட நீலகிரி எம்.பி. ஆ.ராசா மார்கெட் சங்க நிர்வாகி களிடம் விவரங்களை கேட்டறிந்து, தானே பொறுப்பேற்று தனது எம்.பி நிதியின் மூலம் தற்காலிக கடைகளை கட்டி தருவதாக உறுதி யளித்தார்.

    மாதந்தோறும் அதற்கான வாடகையை வியாபாரிகள் தர வேண்டும் என கூறினார். அதனை ஏற்ற வியாபாரிகள் ஆ.ராசாவுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

    வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதில் கலெக்டர் அம்ரித், ஊட்டி நகரமன்ற துணை தலைவர் ரவிகுமார் மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் உட்பட மார்க்கெட் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்பட பலர் இருந்தனர்.

    ×